திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கீரனூரில் துர்க்கை அம்மன் கோயில் மற்றும் கண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் கீரனூர் பகுதியில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் சொந்தமான கோயிலாகும்.
இந்நிலையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஐந்து வெளியூர் நபர்கள் இந்த கோயிலுக்கு அறங்காவலர்கள் என்று அறக்கட்டளை நிறுவி கோயிலை கைப்பற்றினர்.
இதனையடுத்து திருக்கோயில் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளை அடைத்தனர்.
இதையடுத்து அப்பகுதி பொது மக்கள் ஒன்றாக இணைந்து இந்த இரண்டு கோயிலும் ஊர் பொதுமக்களுக்கு சொந்தமானது.
ஆனால் தனி
நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
மேலும் சாலை மறியல், மனு கொடுக்கும் போராட்டம், காத்திருப்பு போராட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் வட்டாட்சியர் சக்தி வடிவில் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த அமைதி பேச்சு வார்த்தையில் அனைத்து சமூக மக்களும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டனர்.
மேலும் எதிரி வேலுச்சாமி என்பவர் மகன் செல்வராஜ் உட்பட நான்கு நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை தொடங்கினர்
தொடர்ந்து ஊர் பொது கோயிலை ஐந்து நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில் தொடர்ந்து வட்டாட்சியர் இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்டிருந்த பின்பு இரண்டு அணியினரும் நீதிமன்றம் சென்று கோயில் சம்பந்தப்பட்ட ஆணைகளை வாங்கி வர வேண்டும் அதுவரை இரண்டு அணியினரும் கோயில்களுக்குள் நிர்வாகம் சம்பந்தமாக யாரும் செல்லக்கூடாது எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று அமைதிப் பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டன.
மேலும் புதிதாக எவ்வித கட்டுமான பணிகளையும் செய்யக்கூடாது என்று பேச்சுவார்த்தையில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து இந்நிகழ்வில் முத்துகிருஷ்ணன்,
குமார், ஜானகிராமன், பிரபு,மாரியப்பன், துர்க்கைஸ்வரன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அமைதிப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவு பெற்றன…