பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தலித் கிறிஸ்துவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பாபநாசம் கீழ வீதி இருந்து ஊர்வலமாக தொடங்கி புதிய பேருந்து நிலைய வரை சென்று பின்னர் புனித செபஸ்தியார் திருத்தல வளாகத்தை வந்தடைந்தது அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் தலைமை வகித்தார்
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் சிறுபான்மை நலக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் காதர் உசேன் தலித் கிறிஸ்துவ நல சங்கத்தின் தலைவர் சின்னையன் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ் ராபர்ட் ராஜா அடைக்கலம் ஜெயசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் தலித் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு எஸ்.சி பட்டியலின உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக கல்வி வேலைவாய்ப்பு அரசியல் பிரதிநிதித்துவ உரிமைகள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாவதை போக்கிடவும் 2005 இல் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை மேம் படுத்தாமலும் மேலும் 2004 முதல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கினை முடிவுக்கு கொண்டு வராமலும் மற்றும் தமிழக அரசின் தனி தீர்மானத்தை நிறைவேற்றாமல் தாமதப்படுத்தி வரும் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும்,மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு 1950 ஆண்டு ஜனாதிபதி அணை பட்தி 3 ஐ ரத்து செய்து தலித் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்கள் கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது