விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஏ கே டி தர்மராஜா பெண்கள் கல்லூரி மற்றும் ஏகேடி சக்கனி அம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி மாணவிகள் இணைந்து முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
1990 முதல் 2022 ஆம் ஆண்டு வரை கல்லூரியில் படிப்பை முடித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது பள்ளி தாளாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் பெண்கள் கல்லூரி முதல்வர் ஜமுனா கல்வியியல் கல்லூரி முதல்வர் அகிலா ரூபி செண்பகம் வரவேற்று பேசினார்கள் கல்லூரி தாளாளர் கிருஷ்ணராஜு பேசும்போது, “இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடத்தப்படும் எனவும், ஒருவருக்கொருவர் மனம் விட்டு மகிழ்ந்து பேசி, பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தருணமாக இதைக் கருதி அனைவருமே இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கல்லூரி ஆட்சி மன்ற குழு சார்பில் கீதா, அறக்கட்டளை உறுப்பினர் ரமணி பங்கேற்றனர் முடிவில் பள்ளி மாணவி சார்பில் பொன் சுரேகா நன்றி கூறினார். ஆயிரக்கணக்கான மாணவிகள் பங்கேற்று ஆட்டம் கொண்டாட்டத்துடன் இனிமையாக பொழுதை கழித்தனர்.
இதில் 2000 மாவது ஆண்டில் இக்கல்லூரியில் படித்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கவிதாஜவகர் தன்னுடன் படித்த மாணவிகளுடன் வந்து கலந்துகொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் முன்னால் மாணவிகள் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறைகளுக்கு சென்று அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது என்றும் இதை ஏற்பாடு செய்த நிர்வாகத்தினருக்கு நன்றிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது