கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவ,மாணவிகள் தேசத்தலைவர்களின் வேடம் அணிந்து தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலைகளை செய்து ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்…
கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை , வேல்கம்பு , வாள்வீச்சு , வளரி மான்கொம்பு , சுருள்வாள் , வாள்வீச்சு,போன்ற , பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது.மேலும் இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் பலர் பல்வேறு உலக சாதனைகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே பயிற்சி கழகத்தில், பயிற்சி பெற்று வரும் 18 மாணவ,மாணவிகள் இணைந்து புதிய உலக சாதனை செய்து ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்..
78 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இதில்,மகாத்மா காந்தி,சுபாஷ் சந்திரபோஸ்,மகாகவி பாரதி,ஜான்சி ராணி,பகத்சிங் என பதினெட்டு தேச தலைவர்கள் வேடமணிந்த மாணவ,மாணவிகள் தொடர்ந்து 78 நிமிடங்கள் சிலம்பம்,சுருள் வாள்,மான்கொம்பு,வேல் கம்பு,ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம் என தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலைகளை செய்து அசத்தினர்.
முன்னதாக உலக சாதனை நிகழ்வை நடராஜன் துவக்கி வைத்தார்..
முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தின் நிறுவனரும்,ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தின் தமிழ்நாடு தீர்ப்பாளர் டாக்டர் பிரகாஷ் சாதனை புரிந்த மாணவ,
மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்..
இந்த .சாதனை நிகழ்ச்சியில் முல்லை தற்காப்பு கலை துணை பயிற்சியாளர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மித்ரனை உற்சாகபடுத்தினர்…