போடிநாயக்கனூர் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புக்கோட்டை எம் ஜி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது தற்பொழுது தமிழகத்தை ஆளும் திமுக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரகப்பதிகளுக்கான கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தி உள்ளார்
ஏனென்றால் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் வரவுள்ளது இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக முழுவதும் திமுக வெற்றி பெற இந்த திட்ட முகாம் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது
இதன்படி நேற்று போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி தலைமை வகித்து முகாமில் பங்கேற்ற கிராம பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை முதியோர் உதவித்தொகை உள்பட பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உப்புக்கோட்டை மூர்த்தி நாகலாபுரம் காளிதாஸ் கூளையனூர் முருக லட்சுமி டொ ம்புச்சேரி ராஜேந்திரன் மற்றும் 17 அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்
இந்த திட்ட முகாமில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐந்து கிராம ஊராட்சி பொதுமக்கள் பயன் பெற்றனர்.