சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு, மாஸ் கல்வி குழுமம் மற்றும் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் அமைப்பும் இணைந்து கும்பகோணம் மாஸ் கல்லூரி வளாகத்தில் இயற்கை வேளாண் திருவிழா நடைபெற்றது. இதில் இயற்கை வேளாண் உழவர்கள் விளைவிக்கும், பொருட்களை சந்தைபடுத்தும் தளமாக அமைந்திருக்கிறது.

சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி பாலசுப்பிரமணியன், . மாஸ் கல்லூரி தாளாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தொடங்கியது.

இதில் சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் ராஜேந்திரன், கல்விக்குழு அறங்காவலர் விக்னேஷ்குமார், கல்லூரி முதல்வர் சரவணன், தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கே.எம் பாலு உள்ளிட்ட எண்ணற்ற விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த இயற்கை வேளாண் திருவிழா 2024-இல், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவ சிலை வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் வகையில் இளவட்ட கல் தூக்குதல், ஜல்லி கட்டு காளைகள் ஆகியவை கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசி ரகங்கள், நாட்டு காய்கறி, கீரை ரகங்கள் பல வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இளம் தலைமுறையினருக்கு, மறந்து போன நம் பாரம்பரிய விளையாட்டுக்களான பம்பரம், ஆடு புலி ஆட்டம் ஆகியவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, அதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்த கண்காட்சியானது, இளைஞர்கள் மத்தியில் இயற்கை உணவுகள் குறித்தும், அவற்றின் இன்றியமையாத நற்பலன் குறித்தும், எடுத்துரைக்கும் நிகழ்வாக இந்த திருவிழா அமைந்திருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *