விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம் ராஜபாளையம் நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பழனிச்சாமி பேசியதாவது. தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 35 ஆயிரம் சாலை பணியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்காது மேலும் தனியார் சுங்கவரி வசூல் கொள்ளை நடத்த வழி வகுக்கும் ஆகையால் ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
சாலை பணியாளர்களில் உயிரிழந்த குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும் என இவ்வாறு கூறினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகன் செந்தில் வேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் தேவராஜ் நன்றி கூறினார்.