விருதுநகர் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னோடி விவசாயி என்.எஸ்.ஜெகநாத ராஜாவை மாநிலத் தலைவர் ஜி கே வாசன் நியமித்தார். நியமித்த பின்னர் என். எஸ். ஜெகநாத ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அது சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இதற்காக ஜி.கே. வாசனுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் நகரம் மட்டுமின்றி கிராமம் கிராமமாகச் சென்று பிரிந்து கிடக்கும் காமராஜர், மற்றும் மூப்பனார் தொண்டர்களை சந்தித்து தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்துவதே முக்கியமான நோக்கமாகும். மேலும் பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்திற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்” இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடன் மூத்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தவமணிகுரு, கண்ணன் ராஜா மற்றும் இளைஞர் அணி முத்துக்குமார் உள்பட பலர் இருந்தனர்.