போதை எதிர்ப்பு நாளான இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் போதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்க காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் உத்தரவிட்டதை தொடர்ந்து ராஜபாளையம் உட்கோட்டம் முழுவதும் வட்டாட்சியர் ஜெயபாண்டி டிஎஸ்பி அழகேசன்
பிடிஓ. போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீமான் உள்ளிட்ட அனைத்து காவல் அதிகாரிகளும் தலா ஒரு கல்வி நிறுவனம் என திட்டமிட்டு ஒரே நேரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர் பள்ளி கல்லூரி ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்போம்
போதை பொருட்களை பயன்படுத்துபவர்களிடம் அதன் தீமைகளை எடுத்து கூறி நமது நகரை போதையில்லாததாக மாற்றுவோம் போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பது போன்ற போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
