எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் பள்ளி கல்வித்துறை மற்றும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய குறுவட்ட தடகள போட்டிகள்.37 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்த்தும் குறுவட்ட தடகள போட்டிகள் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் தடகள போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர் தலைமையேற்று நடத்தினார்.
நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றி போட்டியை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.விரராதாகிருஷ்ணன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.சீர்காழி குறுவட்ட அளவில் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 37 பள்ளிகளை சேர்ந்த 14 வயது 17 வயது 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் என சுமார் 750 மாணவ,மாணவிகள் கலந்து பங்கேற்றுள்ளனர்..
200 மீட்டர் 400 மீட்டர் 800 மீட்டர் ஆகிய ஓட்டப்பந்தய போட்டிகளும், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.