கும்பகோணத்தில் கலைஞரின் கனவு இல்லம் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 270 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 2024-2025 கலைஞரின் கனவு இல்லம் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 270 பயனாளிகளுக்கு 9.45 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையை மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கணேசன் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் விருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆர் கே பாஸ்கர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ் சிவக்குமார் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பிரதிநிதிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *