கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் வசதிகள் அதிகரித்ததை அடுத்து, டவுன் பஸ் வசதி இல்லாததால் பயணிகள் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பல கட்ட போராட்டங்களுக்குப் பின், சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நான்கு தொடர் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ஊத்தங்கரை சுற்றுவட்டார மக்கள் கோயம்புத்தூர், திருப்பதி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த செலவில் செல்ல வசதியாக இருந்தாலும், ரயில் நிலையத்தில் இருந்து ஊத்தங்கரை அல்லது கிருஷ்ணகிரி செல்ல டவுன் பஸ் வசதிகள் இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது.
பெரும்பாலான மக்கள் ஆபத்தான சரக்கு வாகனங்களில் பயணிப்பதோ அல்லது திருவண்ணாமலை, பெங்களூர் செல்லும் அதிவிரைவு பேருந்துகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, ரயில்கள் வரும் நேரங்களில் டவுன் பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.