தேனி அருகே வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி தலைமை வகித்து போதைப் பொருள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு உதாரணங்களை எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றினார்
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சாமுவேல் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் வெ. கணேசன் வீரபாண்டி போலீஸ் சார்பு ஆய்வாளர் அசோக் கல்லூரி முதல்வர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா அவர்களின் கணவர் சசி நன்றி உரையாற்றினார்