அருந்தியர்களுக்கான 3/.சதவீத உள் இட ஒதுக்கீடு செல்லும் என தலைமை உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மற்றும் சட்டரீதியாக போராடி அருந்ததியர் மக்களின் கல்வியின் வேலைவாய்ப்பிலும் சம உரிமை வேண்டுமென மனித நேயத்தோடு வெற்றி பெற்றுத் தந்த தமிழக முதல்வர்மு. க. ஸ்டாலின், மற்றும்
அருந்ததிர் மக்களுக்காக பாடுபடும் சமூக நீதி போராளி இட ஒதுக்கீட்டு போராளி அதியமானுக்கும் மதுரை மாநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை அருந்ததியர் சொந்தங்களின் சார்பில் நன்றியை தெரிவிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்
கோ. தளபதியை மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி வெற்றியை மாநில இளைஞர் அணி செயலாளர் க.சாமிகண்ணு தலைமையில் கொண்டாடினர்.
கலை இலக்கிய அணி மாநில செயலாளர்
இரா. செல்வம்,மதுரை மாநகர மாவட்ட செயலாளர் ஆதவன்,மாவட்ட துணை செயலாளர் நாக முத்து, தூய்மை பணி தொழிலாளர்கள் மாவட்ட செயலாளர் ரமேஷ்,மாவட்ட மகளிர் அணி தலைவி கௌரி, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி,
பழங்காநத்தம் கிளைச் தலைவர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
