தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்,ஓவியஆசிரியர்,தையல் ஆசிரியர் மற்றும் இசை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளது..

இந்த பணிகளுக்கு கடந்த 2017 ம் ஆண்டு தேர்வு நடத்தபட்டது..7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சிறப்பு ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு நடத்தபட வில்லை..அரசு பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு ஆசிரியர் கல்வியை கற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வரவேண்டும்..மேலும் காலியிடங்களை அடையாளம் கண்டு சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பையும்,காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி மரத்தடி மையம். சார்பிலும்,தேர்வர்கள் சார்பிலும் வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *