செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் நாகவேடு ஊராட்சியில் தாட்கோ சார்பில் மாநில அரசு திட்டத்தின் கீழ் ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா சமுதாயக் கூடத்தில் குத்து விளக்கேற்றினார்கள்.
உடன் ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலு, வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மங்கையர்கரசி சுப்பிரமணி, சுந்தராம்பாள் பெருமாள். தாட்கோ மேலாளர் சரண்யா. வட்டாட்சியர் ஜெயபிரகாஷ். இளநிலை பொறியாளர் தாட்கோ செல்வகுமார். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி மற்றும் பலர் உள்ளனர்.