காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் அருகே தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் வடமாநிலத்தவர்கள் அதிகம் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மதுபான கடை திறப்பு நேரம் தவிர காலை மற்றும் இரவு நேரங்களில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளிலான சுங்குவார்சத்திரம், மொளச்சூர், இருங்காட்டுக்கோட்டை, பென்னலுர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.
இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் உதயகுமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்டரம்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகேசன், கீவளூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் கார்த்திக்கின் உறவினர் லோகேஸ்வரி என 3 பேர் வீட்டிலும் போலீசார் சோதனை செய்ததில் 3 பேர் வீட்டில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
150 ரூபாய் மதிப்புள்ள இந்த மது பாட்டிலை 250ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது
அதனைத் தொடர்ந்து
மேற்படி 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பென்னலூர், சுங்குவார்சத்திரம், போந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் சூழலில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.