திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 78வது ஆண்டு சுதந்திர தின விழா. திருவாரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில் 78வது சுதந்திர தினவிழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
சாருஸ்ரீ. தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுரிந்த 233 அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் 55 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 39 ஆயிரத்து 450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ப்ரியங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி இன்று (15.08.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது     விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, தேசிய கொடியை ஏற்றி வைத்து,  காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சமாதானப் பறவையை பறக்க விட்டார்   சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களாகிய மனோன்மணி, பரமேஸ்வரி, கமலா ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்

தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை மருத்துவத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த 233 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தோட்டக்கலைத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேளாண்மைத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக பாதுகாப்பு திட்டம் ஆகிய துறைகளின் மூலம் 55 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 39 ஆயிரத்து 450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

அதனைத்தொடர்ந்து சுதந்திர தின விழாவில் பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூந்தோட்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி ஜான் பிரிட்டோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா வருவாய் கோட்டாட்சியர்கள் சௌம்யா (திருவாரூர்) கீர்த்தனாமணி (மன்னார்குடி) உள்ளிட்ட அனைத்துதுறை அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *