ராஜபாளையம்
எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு திறன் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக திரு.நடராஜன் ,திரு.முத்துகிருஷ்ணகாந்த் மற்றும் திரு.ராஜேஷ் அவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு திறன்களை வளர்க்கும் விதம் , ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தொடர்பான கருத்துக்களை மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார் .கல்லூரி முதல்வர் முனைவர் ஜமுனா அவர்கள் தலைமையுரையாற்றினார் .கல்லூரி நிர்வாக உறுப்பினர் டாக்டர் சரவண கார்த்திகேயன் சிறப்பு விருந்தினரை கவுரவப்படுத்தினார் .ஒருங்கிணைப்பாளர் திருமதி.ரேவதி அறிமுக உரையாற்றினார் .மாணவி செல்வி.சக்தி நன்றியுரை வழங்கினார் .