திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா.. திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் சே.ச. தலைமை வகித்தார். தாளாளர் எம் ஏ இஞ்ஞாசி சே.ச.ஆகியோர் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் எஸ். எம் அந்தோணி மனோகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து நூலக இளநிலை உதவியாளர் இசிதோர் ராஜன் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்
நிகழ்வை முன்னிட்டு திருச்சி புனித வளனார் கல்லூரி என்.சி.சி கப்பற்படை பிரிவு மாணவர்களும் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி கப்பற்படை பிரிவு மாணவர்களும் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டும் மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
நிகழ்ச்சியில் கல்லூரி என்.சி.சி அதிகாரி சப் லெட்டினன் முனைவர் வி பாஸ்டின் ஜெரோம், ஏ.லியோ பெரைரா பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயராஜ் நியூட்டன் ரெக்ஸ் தாமஸ் என்.சி.சி.தரைப்படை பிரிவு அதிகாரி பரத் ஜே.ஆர்.சி ஆலோசகர் ஆரோக்கியராஜ் சாரணர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் ராஜ்குமார் யோவான் பிரதீப் குமார் ஆசிரியர் அலுவலர் சங்க செயலர் அந்தோணி ராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்
பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த நூறு கப்பற்படை பிரிவு மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வு ஏற்பாடுகளை என்.சி.சி கப்பற்படை பிரிவு முதன்மை அதிகாரி ராஜராஜன் செய்திருந்தார்