தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊர் புற நூலகத்தில் கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் வாசகர் வட்ட தலைவர் அ மோகன் தலைமை வகித்தார் புரவலர்கள் ஜெயராஜ் இப்ராஹிம் பாஷா முருகன் மணி பூசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நூலகர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார்
தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி நல் நூலகர் சந்திரசேகரன் அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் துரைப் பாண்டி மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உதவியாளர் லெனின் மற்றும் பணியாளர்கள் ஆசிரிய பெருமக்கள் வார்டு உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.