அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் – எம்எல்ஏ வெங்கடேசன் பங்கேற்பு
அலங்காநல்லூர்
78வது சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளில் நடைபெற்றது. பாலமேடு அருகே தெத்துர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தெத்தூர் ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர செயலாளர் மனோகரவேல் பாண்டியன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆறுமுகம், துணைச் செயலாளர் அருண்குமார், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், விவசாயிகள் தனிராஜன், சார்லஸ், உள்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். டி.மேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி தலைமையிலும், தனிச்சியம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு மாரி செல்லப்பாண்டி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வடுகபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமையில் துணை தலைவர் அன்புமுத்து முன்னிலையில் ஊராட்சி செயலர் பங்கஜவள்ளி தீர்மானங்களை வாசித்தார். முடுவார்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி தலைமையில் துணை தலைவர் உமா, முன்னிலையில் ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி தீர்மானங்களை வாசித்தார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ், கலந்து கொண்டார். கல்லணை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு, துணை தலைவர் அய்யம்மாள் அறிவழகன், முன்னிலையில் ஊராட்சி செயலர் தீர்மானங்களை வாசித்தார். மேலச்சின்னனம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகையா தலைமையில் ஊராட்சி செயலர் போஸ் தீர்மானங்களை வாசித்தார். தேவசேரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி சசி தலைமையில் துணை தலைவர் கண்ணன், முன்னிலையில் ஊராட்சி செயலர் தீர்மானங்களை வாசித்தார். அ.கோவில்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன் தலைமையில் ஊராட்சி செயலர் தெய்வேந்திரன் தீர்மானங்களை வாசித்தார். சின்ன இலந்தைகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் மெர்லின் விமலாகுமாரி முன்னிலையில் ஊராட்சி செயலர் சுவிதா தீர்மாணங்களை வாசித்தார். ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் மாணிக்கம் தீர்மாணங்களை வாசித்தார். அச்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ சுதா முருகன் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் முருகேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார். 15.பி.மேட்டுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீபா நந்தினி மயில்வீரன் தலைமையிலும், மாணிக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன் தலைமையிலும் ஊராட்சி செயலர் பெரிச்சி தீர்மாணங்களை வாசித்தார். நடைபெற்ற தொடர்ந்து ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் திருவிளக்கு சாக்கடை வசதி புதிய பேவர் பிளாக் சாலை தார் சாலை அமைப்பது 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.