போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராம சபை கூட்டத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சியை போடி நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் நேற்று சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அதன் தலைவர் லோகநாதன் செயலாளர் கருப்பையா ஊராட்சி ஒன்றிய உதவியாளர் பிரபாகரன் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . கிராம சபை கூட்டத்திற்கு முறையான அணைக்கரைப்பட்டி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் குறித்து ஆட்டோ மூலம் மைக் பிரச்சாரம் செய்து கிராம சபை கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை அழைத்ததால் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சி திட்டங்கள் வரவு செலவு குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர் இதன்பின் அணைக்கரைப்பட்டி ஊராட்சியை போடி நகராட்சியுடன் இணைப்பதற்கு தமிழக அரசு உத்தரவை ஊராட்சி பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கிராம மக்கள் ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் வீட்டு வரி உயர்வு 100 நாள் வேலை இழப்பு தொகுப்பு வீடுகள் கிடைக்காது போன்ற காரணங்களை கூறி அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து எந்த காரணத்தைக் கொண்டும் போடி நகராட்சியுடன் எங்கள் அணக்கரைப்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது என்று கூறி இது குறித்து கிராமத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணுக்கள் எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கப்பட்டன இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *