மதுரையில் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்
- மாநகராட்சி ஆணையரிடம், வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலை களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் வெங்கடேசன் எம். பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை தெரிவித் தார். இதை தொடர்ந்து அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரையில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.
இதனால் பொது
மக்கள் மிகவும் பாதிக்கப்
பட்டுள்ளனர். இந்த சாலைகளை உடனடியாக சீரமைப்பதற்கு மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கு பருவ மழை தீவிரத்தை கணக்கில் கொண்டு உடனடியாக மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முழுமை யாக தயாராக வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற பட்டியலை கொடுத்துள்ளோம். எம்.பி. என்ற அடிப்படையில் முழுமையாக இப்பணிகள் குறித்து விவாதித்திருக்கின் றேன். அதில் எடுக்கப் பட்ட முடிவுகளின் அடிப் படையில் உட்பட 34 சாலைகளை போர் கால அடிப்படையில் 10 களுக்குள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மதுரை ரயில் நிலையம் , புது ஜெயில் ரோடு மேலும் மாநகராட்சி களில் 127கி.மீ. தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்க மாநில அரசுக்கு மாநகராட்சி திட்ட அறிக்கை அனுப்பியுள்ளது. அடுத்த கட்டமாக
கலெக்டரை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். துணை மேயர் நாகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.