கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் குளங்கள் நீர் வழித்தடங்களை தமிழக அரசு தனியார் ஆக்கிரப்பிலிருந்து மீட்டெடுத்து தண்ணீர் நிரப்பக் கோரி விவசாயிகள் தேசியக் கொடியுடன் நூதனப் போராட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள புனித குளங்கள் நீர் வழித்தடங்கள் அனைத்தையும் தமிழக அரசு தனியார் ஆக்கிரப்பிலிருந்து மீட்டெடுத்து தண்ணீர் நிரப்ப கூறி நீரில்லாத குளங்களில் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து கொட்டி கையில் தேசியக்கொடியுடன் நூதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு காவல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமல் நாதன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் கொள்ளிடம் காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் ஆறுகள் மற்றும் அவற்றின் கிளை ஆறுகளில் தண்ணீர் நிரம்ப ஓடி கடலில் சேர்ந்து வரும் நிலையில் கூட காவிரி சமவெளி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குளங்கள் குட்டைகள் ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் சொட்டு தண்ணீர் கூட இதுவரை எட்டி பார்க்காத நிலையில் நீர் ஆதாரங்களுக்கு தண்ணி வரும் வழித்தடங்களில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார்களினால் நீர் செல்லும் நீர் வெளியேறும் வழித்தடங்களில் உள்ள பல்வேறு விதமான ஆக்கிரப்புகளை கும்பகோணம் மாநகர் எல்லைக்குட்பட்ட குளங்களில் தண்ணீர் நிரப்பிக் கோரியும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியும் கையில் தேசிய கொடியுடன் குளங்களில் தண்ணீர் ஊற்றியவாறு பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.