திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியை சேர்ந்த முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ்,இவர் மிசா காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கோ.சி. மணி,மன்னை நாராயணசாமி ஆகியோருடன் இணைந்துதிமுக வளர்ச்சிக்கு பாடுபட்டவர்,இவருடைய பேரனும் வலங்கைமான் ஒன்றிய முன்னாள் திமுக பொறுப்பாளருமான கோ. ராஜ்குமார் மகனான ஆர்.ராஜசேகர் பல சமூக சேவைகளை செய்துதஞ்சை மாரியம்மன் கோவில்தமிழ் தாய் அறக்கட்டளைமூலம் “சேவை செம்மல் 2010″என்ற விருதை 2010-ல் பெங்களூரில் கர்நாடக முதன்மைச் ஐ. ஆர்.பெருமாள் வழங்கினார்.மேலும் இன்று வரை பல சமூக சேவை செய்து வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துவாழ்த்து பெற்றார்.அப்போது தலைமை கழக பொறுப்பாளர் பூச்சி முருகன் உடன் இருந்தார்.