இந்தியாவின் முன்னனி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான, இந்தியன் ஒட்டல் நிறுவனம் தனது ஜின்ஜர் ஓட்டலை விமான நிலையம் அருகே அவினாசி சாலையில் துவங்கியது..
தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் கோவை முதலாவது இடத்தில் உள்ளது..
பல முன்னனி நிறுவனங்கள் கோவையில் தங்களது வர்த்தக நிறுவனங்களை துவக்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் முன்னனி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான, இந்தியன் ஒட்டல் நிறுவனம் தனது ஜின்ஜர் ஓட்டலை கோவை அவினாசி சாலையில் துவங்கி உள்ளது..
நட்சத்திர அம்சங்களுடன், சுமார் 68 அறைகளுடன், அனைத்து வசதிகளுடன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ள ஜின்ஜர் ஓட்டல் குறித்து,நிறுவனத்தின் துணை தலைவரான தீபீகா ராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,கோவையின் விமான நிலையம்,இரயில் நிலையம் மற்றும் முக்கிய பகுதியான அவினாசி சாலையில் ஜின்ஜர் ஓட்டல் அமைந்துள்ளதாக கூறிய அவர்,
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் ஜின்ஜர் ஹோட்டலை எங்கள் விருந்தினர்களுக்காக கோவையில் திறப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
இங்கு வரும்,விருந்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன், கூடிய அறைகள், விசாலமான பிரத்யேக சூட் அறைகள்,, சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறைகளிலும், பணிச்சூழல்களுக்கான பிற பர்னிச்சர் போன்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ளது,ஜின்ஜர் ஆடம்பரத்தின் அடையாளமாக கோவைக்கு வரும் பெரு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக உயர் தர வசதகளுடன் கூடிய
(Q Min) க்யூ மின் உணவகத்தில் உலகளாவிய பல்வேறு வகையான சிக்னேச்சர் சிறப்புகளுடன் உணவுகள் பரிமாறப்படும் என தெரிவித்தார்..
மேலும் உயர்ந்த தரத்திலான மது கூடம்,நவீன வசதிகளை கொண்ட உடற்பயிற்சி மையம், சிறிய காம்பேக்ட் கருத்தரங்க கூடம் போன்ற வசதிகளும் இருப்பதாக அவர் கூறினார்..