செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் ஆவணி அவிட்ட பூஜை விழா .. விஸ்வகர்மா ஆச்சாரியார்கள் ஒன்றிணைந்து பூணூல் அணிந்து வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டைக்ஷ ஊராட்சியில் அருள்பாலிக்கும் அன்னை அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் கோவிலில் இன்று விஸ்வகர்ம குல ஆச்சாரியார்களால் ஆவணி அவிட்ட பூஜை நடைபெற்றது.
முன்னதாக கோவில் தலைமை குருக்கள் பிரசன்னா விஸ்வகர்மா சுவாமி திருவுருவ படத்திற்கு பூஜைகள் செய்து பூணூலை அணிவித்து விழாவை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து காயத்ரி ஜெபம் செய்து ஆச்சாரியார்கள் அனைவரும் பூணூல் அணிந்துகொண்டனர்.
விஸ்வ பிராமண உபாத்தியாயர் லட்சுமி தியாகராஜன் தலைமையில், அழகு.த. சின்னையன், முருகேசன் ஆச்சாரியார், திருநாவுக்கரசு ஆச்சாரியார், செந்தில் ஆச்சாரியார், ஆதவன் ஆச்சாரியார், எஸ்.டி. முருகானந்தம் ஆச்சாரியார் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.