அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 15.பி.மேட்டுப்பட்டி, கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ இடைக்காடர் சித்தர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் கால யாகபூஜை, பூர்னாஹிதி, மஹா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட 12 ராசிகள் திருவாட்சிகள் அமைத்து 27 நட்சத்திரங்கள் நாக விக்கிரங்கள் அமைத்து ஒன்பது நவகிரகங்கள் கலசங்கள் கூடிய கோபுரம் அமைத்து இவை அனைத்தும் உட்பட்டு இந்த கோபுர விமான அமைந்துள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.