விருத்தாசலம் தில்லைநகர் வெற்றி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
விருத்தாசலம் தில்லை நகரில் வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை, விநாயகர் பிரார்த்தனை, மணிமுத்தா நதியிலிருந்து புனித நீர் கொண்டு வருதல், வாஸ்து சாந்தி, அங்குரார் பணம், ரக்ஷாபந்தனம், புது விக்கிரகம் கரிக்கோலம் வருதல், கும்பம் ஆலயத்தில் இருந்து யாகசாலை வந்தடைதல், முதல் காலயாக பூஜை, சிறப்பு ஹோமங்கள், 108 திரவியாகுதி, பூர்ணாகுதி, மகாதீபாரதனை நடந்தது. நேற்று காலையில் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு புறப்பட்டு கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்ற பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்ப மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.