திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நாளை (20- ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று)மின்வினியோகம் இருக்காது என்று திருவாரூர் உதவி செயற் பொறியாளர் (கட்டுமானம்) அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுகிறது.இதன் காரணமாக வலங்கைமான், ஆண்டாங் கோயில்,கீழ விடயல்,சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி,மருவத்தூர்,ஆலங்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.