விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் எஸ். ராமலிங்க புரம் சாலையில் மருத்துவ துணி சலவை செய்யும் ஆலை நடத்தி வருகிறார்.

சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கி வரும் மருத்துவ துணி உற்பத்தி ஆலைகளில் இருந்து கிரே கிளாத் எனப்படும் மருத்துவ துணியை வாங்கி சலவை செய்து வெண்மையாக மாற்றி வழங்கி வந்தார்.

நேற்று இரவில்கிரே கிளாத் பண்டல்கள் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரே அறையில் 100-க்கும் மேற்பட்ட பண்டல்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் ஒரு பகுதியில் பற்றிய தீ மள மளவென என அனைத்து பகுதிகளிலும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறை குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது.
தீ விபத்து குறித்து கீழ ராஜகுல ராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *