திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 80 -வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன், வட்டார சேவா தளத் தலைவர் கே. என்.ஆர். இளங்கோவன்,நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.