கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்தில், வாகன ஓட்டிகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
அதனை தடுக்கும் விதமாக பாலக்கரை ரவுண்டானாவில், புதிதாக அமைக்கப்பட்ட சிக்னலை , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில், வரையப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், உலகத் தலைவர்கள் உள்ளிட்ட உருவம் கொண்ட சித்திரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதன் பின்பு மாணவர்களுக்கு கற்றல் குறித்தும், ஒழுக்கங்கள் குறித்தும், எதிர்கால சிந்தனைகள் குறித்தும் எடுத்துரைத்தார். பின்னர் 30 ஏழை எளிய மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் விருதாச்சலம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், திட்டக்குடி உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மோகன் மற்றும் விருதாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.