இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
காட்டுமன்னார்கோயில்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி தலைமை தாங்கினார்
வட்டாரத் தலைவர்கள் சங்கர் திருவாசகமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு இருக்கக்கூடிய ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
முன்னதாக இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ராமன் அன்வர் இதயத்துல்லா பாபு ராஜன் ஷானு ஜாகிர் உசேன் அண்ணாதுரை தெம்மூர் செல்வம் கோவிந்தராஜன் மற்றும் அழகு ராயர் தம்பியா பிள்ளை ராமதாஸ் திருவரசன் இளங்கோவன் முருகன் ராஜன் தியாகு கிருபாகரன் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்