திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி. முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-2025ஆம் ஆண்டிற்க்கு நடத்துவது குறித்து மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவாரூர் மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு பள்ளி கல்லூரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படவுள்ளது
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பதிவு செய்திட கடைசி நாள்: 25.08.2024 மாலை 5.00 மணி ஆகும்
மேலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள காவல்துறையினருக்கும் நகராட்சித்துறையினர் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களை நகராட்சி பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு குடிநீர் வசதி செய்து தரவும் சுகாதாரத்துறையின் மூலம் போட்டிகள் நடைபெறும் இடங்களை சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொள்ளவும் மருத்துவத்துறையின் மூலம் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் தனித்தனியாக மருத்துவக்குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்திடவும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களை அதிகளவில் விளையாட்டு போட்டிகளில் பதிவுசெய்திடவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளை அதிகளிவில் கலந்து கொள்ள செய்யவும் விளையாட்டு சங்கங்கள் மூலம் சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கங்கள் அவரவர்கள் விளையாட்டு போட்டிகளில் குறிப்பாக பொதுப்பிரிவுகளில் அதிகளவில் கலந்து கொள்ள செய்திடவும் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடர்புடைய துறைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது
கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மனோகர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா உள்ளிட்ட மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
