திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சியில் உள்ள எல்லப்பட்டி.ராமலிங்கம் பட்டி. ராமலிங்கம் பட்டி காலனி.எல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து தினம் தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர் இதில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவதாகவும், தற்போது காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த கணேஷ் பிரபு பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை அகற்ற வேண்டும் ஊராட்சியை மீறி குடிநீர் தொட்டி அமைத்தால் இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து மிரட்டுவதாக கூறி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனுவுடன் வந்திருந்தனர்.
காமாட்சிபுரம் ஊராட்சி தலைவர்.கணேஷ் பிரபு மீது கடந்த சில வாரங்களாக கொடைரோடு அருகே உள்ள கோயில் நிலத்தை அரசு பணியில் இருக்கும் தனது மனைவி.செல்வி பெயரில் பதிவு செய்ததாக புகார் வழங்கி வந்த நிலையில் தற்போது பொது மக்களுக்காக தொண்டு நிறுவனத்தால் வழங்கப்படும் குடிநீரை தடுத்த நிறுத்துவதாக கூறி பொதுமக்கள் புகார் மனு.
தொடர்ந்து குற்றங்கள் செய்து வரும் காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ் பிரபு மீது தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான
ஐ.பெரியசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.