திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி அம்பேத்கர் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பாக முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன..
தொடர்ந்து 2024 பாராளுமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் வெற்றி பெற்ற திருமாவளவனுக்கு வெற்றி விழா.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகாரம் பெற்ற வெற்றி விழா.
ஆகஸ்ட் 17 திருமாவளவனின் பிறந்தநாள் விழா மற்றும் ஆகஸ்ட் 2 கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றன.
இந்நிகழ்வின் தலைமையாக இளைஞ்சிறுத்தை எழுச்சி பாசறை
ஒன்றிய அமைப்பாளர் பாலசுப்பிரமணி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் வாஞ்சிநாதன்
பேரூர் செயலாளர் பிரபு மற்றும்
சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை நிலைய செயலாளர் பாவரசு, மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன்,
மண்டல செயலாளர் தமிழ்வாணன்,
மாவட்ட செயலாளர்
திருவளவன்,
மாவட்ட செய்தி தொடர்பாளர்
பொதினிவளவன் மாவட்ட துணைச் செயலாளர் பாவேந்தன் தொகுதி துணைச் செயலாளர் போர்க்கொடி ஏந்தி,
ஒன்றிய செயலாளர் ஜெயசீலன்,
மற்றும்
பேரூர் துணைச் செயலாளர் பாவலன், மணவாளன், மாரிமுத்து, ஆதிவளவன்,
குறள்நெறியன்,
முருகன், சேரிதமிழன், மாயவன், ராசாத்தி, ராஜேந்திரன்,
இளையதுரை, லெனின், பாண்டிவளவன், குழந்தை துவாரகா, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது மற்றும் போதை ஒழிப்பு பெண்கள் மாநாடு குறித்து பல்வேறு கருத்துக்களை நிர்வாகிகள் பொதுமக்களிடையே எடுத்துக் கூறினர்.
மேலும் குழந்தை துவாரகா திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் பாடும் விதமாகவும் கட்சிக் கொள்கையை எடுத்துரைக்கும் விதமாகவும் பல்வேறு கருத்துக்களை பொதுமக்களிடையே எடுத்துக் கூறிய நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது…