செங்குன்றம் செய்தியாளர்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி கொண்டதாகும் தற்போது ஏரிக்கு 2 1 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது ஏரியில் நீர் இருப்பு 247 மில்லியன் கண அடியாக உள்ளது மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் போது உபரிநீர் வெளியேற்றபடும்.
இந்த உபரி நீரானது கடலைப் போய் சேரும் கால்வாய்களான வடகரை கிரானைட் லைன் உள்ளிட்ட பகுதிகளில் கரைகள் சேதமடைந்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து வந்தது .இதனை சீரமைப்பு செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கி மழை நீர் கால்வாயை துரிதபடுத்தும் பணியினை செய்து வரும் பணியை பொது பணித்துறை சார்பாக நடைபெற்று வரும் இந்த கால்வாய் பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார் அவருடன் சப் கலெக்டர் பொன்னேரி வட்டாட்சியர் மதிவண்ணன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் நாரவாரி குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசிக்குமார் செயலாளர் யமுனா மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கௌரிசங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.