திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காப்பணா மங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளரும், வன்னியர் சங்க மாநில துணை பொது செயலாளர் ஆகிய சிவசுப்பிரமணியன் அகால மரணம் அடைந்ததற்கு இரண்டு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் வன்னியர் சங்கம் உருவான விதம் அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு, பாட்டாளி மக்கள் கட்சி உருவான விதம், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இடம் பெற்ற போதுதான் 108 ஆம்புலன்ஸ் வந்தது பற்றியும், இன்று தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளால் நமது சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே வருகின்ற 2026 இல் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி அமைந்திட அனைத்து பூத்துகளிலும் 10 பேர் கொண்ட பூத்து கமிட்டி அமைத்திட அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் பேசப்பட்டது.
சட்டமன்றத் தொகுதி பொறுப்புகளில் அனைத்து சமுதாய மக்களும் வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர், மேலும் நிகழ்வில் மேலிடப் பார்வையாளர்களாக வருகை தந்த தருமபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான பாரி மோகன்,வன்னியர் சங்க மாநில பொறுப்பாளர் குணசேகரன், பாட்டாளி மக்கள் கட்சி தொழிற்சங்க மாநில பொறுப்பாளர் சேலம் ஸ்டீல் சதாசிவம் ஆகியோர் தொகுதி தலைவர், செயலாளர், மகளிர் தலைவர், செயலாளர் பொறுப்பாளர்களுக்கான மனுக்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இந் நிகழ்வில் வன்னியர் சங்கம் மாவட்ட தலைவர் குமார், குடவாசல் ஒன்றிய செயலாளர் ராஜு மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருவாரூர் மாவட்ட ஒன்றிய, நகர, நன்னிலம் ஒன்றியம், குடவாசல் ஒன்றியம், கொரடாச்சேரி ஒன்றியம் பொறுப்பாளர்கள்கலந்து கொண்டனர்.