ராஜபாளையத்தில் அடுத்தடுத்து டூவீலர் மாயம்! இளைஞர் கைது!


ராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (40) ஆட்டோ டிரைவர். இவரது இருசக்கர வாகனத்தை சங்கரன்கோவில் முக்குப்பகுதியில் நிறுத்திவிட்டு ஆட்டோ சவாரி சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதையடுத்து தெற்கு காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். இதே போல் கோட்டை தலைவாசல் தெருவைச் சேர்ந்த ராசுக்குட்டி (24) என்பவரது இருசக்கர வாகனம் சங்கரன்கோவில் மெயில் ரோடு விநாயகர் கோவில் எதிரே நிறுத்தியிருந்த வாகனத்தை காணவில்லை. தெற்கு காவல் நிலையத்தில் ராசுக்குட்டி புகார் அளித்தார். அடுத்தடுத்து இருசக்கர வாகனம் காணததால் விசாரணை முடிக்கிவிட்டனர்.

விசாரணையில் ஆவரம்பட்டியைச் சேர்ந்த காளைப்பாண்டி (29) திருடியது தெரியவந்தது. இரண்டு இருசக்கர வாகனத்தை மீட்டு காளைப்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *