செங்குன்றம் செய்தியாளர்
சென்னன கொளத்தூர் மாதனான் குப்பம் சதீஷ்பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் 18 ஆம் ஆண்டு விளையாட்டுத் தினவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் , மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் கே .மாடசாமி இயக்குனர் சதீஷ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற தேவராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் பேசும் போது மாணவர் மாணவிகள் பெற்றோரின் சொல் பேச்சு கேட்டு நடக்கவும் படிப்பில் முழு கவனம் செலுத்துமாறும் தீய பழக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் படியும் நல்ல மாணவர்களின் எதிர்காலத்திற்காக ஆசிரியர் ஆசிரியர்கள் உங்களுக்காக பெற்றோர்களுக்கு மேலாக உங்களின் மேல் அதிக கவனம் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய பாடுபடுகின்றனர் என கூறினார்
இதில் பள்ளியின் தாளாளர் , ஆலோசகருமான எ.திருமுருகன் முதல்வர் ஹெலன் சேவியர், துணை முதல்வர் எஸ்.முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். மற்றும் மாணவ மாநில பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.