பொள்ளாச்சி
185 வது உலகப் புகைப்பட தின விழா இன்று கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி
தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து துறை மற்றும் புகைப்பட வீடியோகலைஞர்கள், சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது,
தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து கழகம் மற்றும்தமிழ்நாடு போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபர் தொழிற்சங்கம் சார்பில்ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணியை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி கொடி அசைத்து துவைக்க வைத்தார், இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன்,மோட்டார் வாகன ஆய்வாளர்
கோகுலகிருஷ்ணன்முன்னிலையில் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ சங்க
மாநில பொருளாளர் V.சரவணன்
டிராபிக் வார்டன் கமலக்கண்ணன்
ஆகியோர் தலைமையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் தொடங்கிய இருசக்கர பேரணியில்
நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து படி கோவை சாலை, பாலக்காடு சாலை உடுமலை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்றடைந்தது
அண்மைக்காலமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது, எனவே உயிர் கவசமான தலைக்கவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் என்று பேரணியில் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்
இதில் என். ஐ.ஏ கல்வி நிறுவனங்களில் மக்கள் தொடர்பாளர் நாகராஜன் மற்றும் வீடியோ மட்டும்
புகைப்படக் கலைஞர்கள் சங்கத் தலைவர்
ஆர். மதனகோபால் செயலாளர் எம் .ஜியாவுதீன்
பொருளாளர் ராமராஜ் இணைச்செயலாளர் ஜலால் பாபு ஆனந்தகுமார் துணைத் தலைவர்
நாசர் அலி சௌந்தர்ராஜன் மற்றும் ஏராளமான புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் கலந்து கொண்டனர்