தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீவீரபாண்டீஸ் வரர் திருக்கோவில் 15 ஆம் நாள் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் அய்யாத்துரை பாண்டியர் கலந்து கொண்டு 15 ஆம் நாள் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை மில் உள்ள அருள்மிகு சிவகாம சுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ வீரபாண்டீஸ் வரர் திருக்கோவில் 15 வது நாள் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர்
டாக்டர்.ச.அய்யாத்துரைப் பாண்டியர் கலந்து கொண்டு
கொடியேற்றி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் ஏவிகே கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அல்லிராணி அய்யாத்துரைப் பாண்டியர் ஆகியோருக்கு திருக்கோயில் விழா கமிட்டியார் மற்றும் கோவில் குருக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் அய்யாதுரை பாண்டியன் மற்றும் அல்லிராணி அய்யாத்துரை பாண்டியர் ஆகியோர் கோவில் வளாகத்தில் வில்வம், அத்தி, நாகலிங்கம், செண்பக மரகன்றுகளை நட்டு வைத்தனர்.e
இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர அதிமுக செயலாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான வி.கே.எஸ்.சக்திவேல், தேவரின பாதுகாப்பு மக்கள் இயக்க நிறுவனர் வெயிலு முத்துப் பாண்டியன், காவல்துறை ஓய்வு வீராணம் பழனிச்சாமி, சுரண்டை சபிக்ஷா கருப்பசாமி, மற்றும் திருக்கோவில் விழா கமிட்டியாளர்கள், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.