கோவை
வயநாடு இயற்கை பேரிடர்- கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளின் சார்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக 3,06,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சூரல்மலை, முண்டக்கை, போன்ற இடங்களில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக 3 லட்சத்தை 6000 ரூபாய் பணமாக 31 குடும்பங்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக பார்வையிட்ட பின்பு கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் நிர்வாக கமிட்டி சார்பாக செயலாளர் பீர் முகமது, முத்துவல்லி, ஜாபர் அலி, பொருளாளர் பக்கீர் முகமது, துணைத் தலைவர் சாகுல் ஹமீத், செயற்குழு, உறுப்பினர்கள் ஆஷிக் அகமது,முகமது யூசுப், முகமது இப்ராஹிம், ஆகியர்கள் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கினர்.
மேலும் அம்மாநிலம் கல்பட்டா பகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்தி, மற்றும் மன்சூர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு பொருளாதார உதவியும் செய்து தரப்பட்டுள்ளது.