சீர்காழி ஆச்சாள்புரத்தில் கோலாகலமாக நடந்த சிவலோக தியாகராஜ ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியயை அடுத்த ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவென்னீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சமயக்குறவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் திருமண கோலத்தில் காட்சி அருளும் ஸ்தலமாகவும் துணைவியாருடன் சிவசோதியில் கலந்து அருளிய சிறப்புமிக்க கோவிலாக திகழ்கிறது.

இக்கோவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 20ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது.

இன்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு சிவ வாத்தியங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வளம் வந்து சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது அதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன கும்பாபிஷேகத்தில் சூரியனார் கோவில் ஆதீனம் தொண்டை மண்டல ஆதீனம் செங்கோல் ஆதீனம் நாச்சியார் கோவில் ஆதினம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொள்ளிடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *