கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற அவின்யா கண்காட்சியை ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு வியந்தனர்…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா ரிப் வி பள்ளியில் நிறுவனர் K.வெங்கடேசலு நாயுடு பிறந்தநாள் நினைவாக அவின்யா 2024 எனும் கண்காட்சி பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக,ஓய்வு பெற்ற இந்தியன்
ஏர் ஃபோர்ஸ் கல்வி அதிகாரி ஸ்ரீராம் கலந்து கொண்டார்..

இந்நிகழ்ச்சியில், சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, பள்ளியின் தாளாளர் சுகுணா, இணை நிர்வாக இயக்குனர் அனீஸ் குமார், சாந்தினி அனீஸ் குமார், சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் ராஜாமணி அம்மாள், பள்ளி இயக்குநர் மற்றும் முதல்வருமான ஆண்டனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

இக்கண்காட்சியில் மாணவர்களே வடிவமைத்த ஏவுகணை, லேண்டர்,ரோவர், சூரிய ஒளியில் இயங்கும் கார்,மோட்டார் பம்பு வடிவமைப்பு, ஆகியவை இடம்பெற்றன.

குறிப்பாக மாணவர்கள் இணைந்து தத்ரூபமாக கிராமசபை,மற்றும் நீதிமன்ற நிகழ்வுகளை கண் முன்னே நிறுத்தினர்.
இதனை சிறப்பு விருந்தினர்கள் ஆர்வமுடன் கண்டனர்..

இரண்டாவது நாளாக நடைபெற்ற கண்காட்சியில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டனர்..

குறிப்பாக இந்த கண்காட்சியில்,சந்திராயன் 3 விண்கலம் மெதுவாக நிலவில் இறங்கியதையும், அதனை தொடர்ந்து விக்ரம் லேண்டர் ரோவர் வாகனம் மெதுவாக வெளியில் வருவதை வியப்புடன் கண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் விண்கலம் தரையிறங்கியதை நேரில் கண்ட அனுபவத்தை உணர்ந்த்தாக கூறினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *