திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.இத்நிகழ்ச்சியில் முருகன் பாலமுருகனடிமை சுவாமிகள் (இரத்தினகிரி) 100 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார்.உடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் வரலாற்று சிறப்புகள் 3d வடிவமைத்த பக்தி பாடல்கள் கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்.பூங்கொடி அமைச்சர்.சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்.சச்சிதானந்தம், தர்மபுரம் மடாதிபதிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.