புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குமுடிமூலை ஊராட்சியில் உதவும் கரங்கள் பவுண்டேஷன், பி வெல் மருத்துவமனை கடலூர் ,எக்விடாஸ் அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கண் மற்றும் பொது மருத்துவ முகாம் உதவும் கரங்கள் பவுண்டேஷன் நிறுவனர் அருண்மொழி தலைமையில் நடைபெற்றது .

ஊராட்சி மன்ற தலைவர் செளந்தரி நடராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து முகாமை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர் மருத்துவர் அருண்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கினார்

அகர்வால் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பவுண்டேஷன் நிறுவனர் அருண்மொழி சால்வை அணிவித்து கௌரவித்தார் இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்

புவனகிரி அருகே வடக்குத்திட்டை ஊராட்சியில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வடக்குத்திட்டை ஊராட்சியில் உதவும் கரங்கள் பவுண்டேஷன் பி வெல் மருத்துவமனை கடலூர் மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து கண் மற்றும் பொது மருத்துவ முகாம்

ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது .மருத்துவர் அருண்குமார் தலைமையில் மருத்துவர்கள் நவீன் ,ஹேமா செவிலியர்கள் சினேகா மஸ்கூரா கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கினார் இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர் மேலும் இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *