திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பள்ளியின் சுமார் 800 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் புனித மரியன்னை முன்னாள் மாணவர் இயக்கம் நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் போதை பொருளின் தீங்கு, பாதிப்பு, அழிவு பற்றி கருத்தாளராக மருத்துவர்.அழகுமலை- Orthopa -KMC- TRICHY , Dindigul UMA Dental Care பல் மருத்துவர்.விக்னேஷ் PPT-யுடன் விளக்கினர். போதை பொருளால் ஏற்படும் தீங்கு மற்றும் சட்டப் பிரச்சினைகளை பற்றி Ln வழக்கறிஞர். சுரேஷ் குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்வை தலைமை ஏற்று பள்ளியின் தாளாளர் அருட்பணி. மரியநாதன் சேசு சபை. பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி, ஆரோக்கியதாஸ் சேசு சபை. ஆகியோர் வழிநடத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பொறுபேற்ற ஜெயசீலன், பிரான்சிஸ் அந்தோணி ராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். ஆசிரியர். சுவக்கின் அமல்ராஜ் போதையில்லா உலகம் படைக்க உறுதி மொழியினை வாசிக்க, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்விற்கு பொருளர். தேவராஜ் நன்றி கூறினார்.
முன்னாள் மாணவர் இயக்க செயலர் .மைக்கேல், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் இதில் பங்கெடுத்து இந்த கருத்தரங்கு நிகழ்ச்சி வெற்றி பெற உதவினர்